நிகழ்வுகள்
1. பட்டிமன்றம்....
2.சொற்பொழிவு...
3. மூத்தோர் சந்திப்பு
4. நண்பர்கள் கவிதை போட்டி
 
 
 
 
 

நிலாமுற்றம்

     YAHOO அரட்டையில் அறிமுகமாகித் தினமும் மணிக் கணக்கில் இணைந்திருந்த நண்பர்கள் தமக்கென ஒரு அரட்டை அறையான `அன்பு அரண்மனை`யை உருவாக்கி இருந்த காலத்தில் அன்பு அரண்மனை இயங்காத நேரங்களில் உருவாகிய அரட்டை அறை தான் `நிலாமுற்றம்` என்றழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் உருவான இணையத்தளம் தான் நிலாமுற்றம்.கொம் ஆகும்.

     நிலாமுற்றத்துக்கு உங்களை வரவேற்பதில் நாம் மிகமகிழ்ச்சியடைகிறோம். இந்த நிலாமுற்றம் ஒரு காலத்ில் பலகுருவிகளும் வந்து தங்கும் ஆலமரமாக இருந்து இருக்கிறது.தவிர்க்க முடியாத காரணத்தினால் இதன் செயற்பாடு சற்றுதளர்வடைந்து இருந்தாலும் நண்பர்களின் அயராத உழைப்பாலும்ஊக்கத்தாலும் நிலாமுற்றம் மீண்டும் உங்கள் முன்னேவிரிந்திருக்கிறது.

     தினமும் இந்த முற்றத்துக்கு உலா வாருங்கள். உங்கள்ஆக்கங்களை விமர்சனங்களை எழுதுங்கள். ஆக்க பூர்வமானவிமர்சனங்கள் தான் எங்களை வளர்க்கும் என்பதில எமக்குஅசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நிலாமுற்றம்உறுப்பினரகளினது களமாக இருந்த போதும் இங்கு உலா வரும்விருந்தினர்களின் ஆக்கத்துக்கும் களமாக அமைக்கபட்டிருக்கிறது நெஞ்சங்களே!

     கடந்த பத்து வருடங்களாக யாஹூ இணையத்தளத்தூடு பலநண்ப நண்பியர்களை நிலாவாகிய யான் சம்பாதித்து இருக்கிறேன்.என்னை பலவித்ததிலும் ஊக்கப் படுத்தியும், உற்சாகப் படுத்தியும்முன்னேற்றிய பெருமை என் நிலாமுற்றத்து நண்பர்களுக்குஉண்டு.காலங்கள் மாறலாம், ஆனால் எம் நட்பு வாழவேண்டும் என்பதேஎங்கள் ஒருமித்த விருப்பமாக இருந்து வருகிறது. ஆண்டவன்அருளால் எங்கள் நட்பும் தொடர்பும் யாஹூ குழுமம் மூலம்வளர்ந்து வருவது மகிழ்ச்சியே. இனியும் எங்கள் நண்பர்கள்நிலாமுற்றம் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்என நாம் நம்புவோம்.நிலாமுற்றம் வேறு, அன்பு அரண்மனை வேறல்ல. அன்புஅரண்மனையின் மறுவடிவம் தான் நிலாமுற்றம். இந்தநிலாமுற்றத்து கடந்த காலத்து நினைவுகள் இன்னும் மனதில்மத்தாப்புகளாய் இன்னும் ஒளி வீசுவதை எம் நண்பர்கள் கூறும்போது உள்ளம் துள்ளத்தான் செய்கிறது. இனியும் எங்கள்நிலாமுற்றம் ஒளி வீசுவது எங்கள் நண்ப நண்பியர்களின்பங்களித்தலில் தான் சார்ந்திருக்கிறது.

     இது மட்டுமல்ல நிலாமுற்றத்தின் நோக்கம். வளர்ந்து வரும்எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஒரு களமாக இந்தநிலாமுற்றத்து மன்றம் அமைய வேண்டும் என்பது வேணவா.